உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு மனோகணேசன் நாளை விஜயம்!

கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை அமைச்சர் மனோ கணேசன் திறந்து வைக்கவுள்ளார்.

கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை திறந்து வைக்குமாறு அமைச்சர் மனோ கணேசனுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிகழ்வு ஆலய வண்ணாக்கர் தலைமையில் நாளை காலை 6.30 மணியளவில் பூஜை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு நுழைவாயிலை திறந்து வைக்கவுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கதிர்காம யாத்திரைகளுக்கான உகந்தை குமண காட்டுப் பாதையும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!