நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடக பிரதானிகளை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். (நி)