கொரோனா தொடர்பில் சார்க் தலைவர்கள் ஆராய்வு!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து, சார்க் நாடுகளின் தலைவர்கள், காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் வரவேற்றிருந்தன.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சார்க் நாடுகளின் தலைவர்கள், இன்று மாலை காணொளியில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சார்க் நாடுகளின் அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் என்பன உள்ளடங்குகின்றன.

இந்த கலந்துரையாடலில், கொரோனாவின் தற்போதை தாக்கம் மற்றும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன் போது, ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும், தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!