கொரோனா சந்தேக நபர்களை மன்னார் ஊடாக கொண்டு சென்றமைக்கு மக்கள் எதிர்ப்பு!!

கொரோனா வைரஸ்; தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு, மன்னார் மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுவதாக பரவிய தகவலின் அடிப்படையில், அதற்கு எதிராக, மக்கள் வீதிமறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று மாலை 5.00 மணியளவில், மன்னார் பஸார் பகுதியில், பிரதான வீதியை மறித்து, போராட்டம் முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் போது, மன்னார் மாவட்டம், வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை குறிவைத்து, அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், அதிகமான இடங்கள், மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாக காணப்படுகின்ற போதும், மன்னார் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூடாது எனவும், அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத, பாதுகாப்பான பகுதிகளில் வைத்து, அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்கை வழங்குமாறும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில், தீவக பகுதிகளில் அதிகம் மக்கள் வாழ்வதாகவும், இங்குள்ள மக்களின் நோய்களுக்கு சிகிச்சை அழிக்கவே, வைத்தியர்கள் இல்லாத நிலையில், இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை அழைத்து வருவது, அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளது எனவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை மன்னார் மாவட்டத்திற்குள் கொண்டுவரும் பட்சத்தில், தாங்கள் பேரூந்துகளை மறித்து போராட்டம் ஈடுபட உள்ளதாகவும், மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், போராட்ட பகுதிக்கு சென்ற, பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், பொது மக்களுடன் உரையாடி, அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதாகவும், அவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் எனவும், எனவே பொலிஸார் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவர் எனவும் தெரிவித்ததை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!