உத்தர தேவி ரயில், தம்புத்தேகாமவில் நிறுத்தப்படும்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் உத்தர தேவி ரயில், இன்று முதல் தம்புத்தேகாம ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

துமிந்தா திசாநாயக்க மற்றும் தம்புதேகம தொழிற்சங்கம் உட்பட, பல தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தினமும் காங்கேசந்துறையில் இருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இந்த ரயில், முதன் முறையாக தம்புத்தேகம ரயில் நிலையத்தில், இன்று காலை 9.43 மணிக்கு நிறுத்தப்பட்டது.

கொழும்பு கோட்டையில் இருந்து, முற்பகல் 11.50 மணிக்கு புறப்படும் உத்தர தேவி எக்ஸ்பிரஸ் ரயில், தம்புத்தேகம நிலையத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நிறுத்தப்படும்.

ரயில், கல்கமுவா, மஹாவா, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

இன்றைய நிகழ்வில், அனுராதபுர ரயில்வே கண்காணிப்பாளர் சி.பி.பி. திசாநாயக்க மற்றும் பல ரயில்வே துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!