வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக ஜீ.குணசீலன் தெரிவு!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்’ வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக, முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலன் போட்டியிடுகின்றார்.

ஞானசீலன் குணசீலன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பில், கடந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர், வட மாகாண சபை அமைச்சர்கள் மீது, ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனினால், புதிதாக மாகாண அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன் போது, வட மாகாண சுகாதார அமைச்சராக இருந்த தமிழரசுக் கட்சியை சார்ந்த வைத்தியக்கலாநிதி பா.சத்தியலிங்கம் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரெலோவை சேர்ந்த ஜீ.குணசீலன் நியமிக்கப்பட்டார்.

எனினும் குறித்த அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என, ரெலோ தலைமைப்பீடம் குணசீலனிடம் அழுத்தங்களை பிரையோகித்தது.
எனினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வடக்கு சுகாதார அமைச்சராக பதவியேற்று கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில், ஆசனம் வழக்கிய ரெலோ கட்சிக்கும், அவருக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.

அந்தவகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ சார்பாக, மன்னார் மாவட்டத்தில், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் போட்டியிடவுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!