கொரோனா – இலங்கை பாதிப்பு 11 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில், ஆய்வு கூட பரிசோதனைகளின் பின்னர், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோன தொற்று தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் கீழ் உள்ள நபர்களின் எண்ணிக்கை 133 ஆகும்.

இது, கடந்த 27-01-2020 அன்று சீன நாட்டுப் பெண் இலங்கையில் அடையாளம் காணப்பட்டு குணப்படுத்தப்பட்ட நிலையில், அவர் உட்பட இதுவரை 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, விசேட சிகிக்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக, நாளாந்தம் வெளியிடப்படும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் இருந்து, இலங்கைக்கு கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை வந்த அனைவரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு அடையாளம் காணும் நபர்களில், கொரோனா தொற்று போன்ற அறிகுறிகள் உள்ளோரை தனிமைப்படுத்தி, விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சிறப்பு கலந்துரையாடல், இன்று காலை இடம்பெற்ற போது, இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களில், இத்தாலியில் இருந்து இலங்கை வந்தோர், சுயமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பொலிஸ் துறை மற்றும் சுகாதார சேவைகளின் ஆதரவுடன், தனிமைப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதுவரை நாட்டிற்குள் பதிவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 11 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயாளிகள், வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளனர் அல்லது வெளிநாட்டினருடன் தொடர்புடையவர்கள் என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!