யாழ். இலுப்பையடியில் திருட்டு : ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் இலுப்பையடி சந்திப் பகுதியில், பகல் வேளையில் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்ட, கொடிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, இலுப்பையடி சந்திக்கு அண்மையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால், கொடிகாமம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், கொடிகாமத்தை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து, ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியான, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!