மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்

மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நச்சுக்கு காற்றை சுவாசித்தமையால் இந்த மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதன் காரணமாக பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள பசிர் குடங் நகர் தொழில்துறை நகரமாக விளங்குகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.(சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!