போருக்கு பயந்து ஓடிய கோட்டாவை ஆதரிக்க மாட்டேன்-குமார வெல்கம

 

” போருக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச அவரை நான் ஒருபோது ஆதரிக்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வாங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

” தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படவேண்டுமெனில் அதற்கு சரத்பொன்சேகாவே தகுதியானவர். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அவருக்கே கூடுதல் அனுபவம் உள்ளது.

அதுமட்டுமல்ல போர் முடிவடையும்வரை இராணுவ சேவையில் இருந்தவர்.ஆனால், கம்மன்பில கூறும் நபர் ( கோட்டாபய ராஜபக்ச) போருக்கு பயந்து நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடியவர்.

பொன்சேக்கா தகுதியானவரெனில் 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஏன் தோல்வியடைந்தார் என நீங்கள் கேள்வி எழுப்பலாம். தேர்தலில் வெற்றி, தோல்வியென்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

குறிப்பாக இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த வருடத்தில் தேர்தலில் களமிறங்கிய சி.டபிள்யூ. சி. கன்னங்கரவையே தோற்கடித்தவர்கள் வாழும் பூமி இது.” என்றார் குமார வெல்கம.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!