அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பகிறது : மஹிந்த

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக முதன் முதலில் அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இப்போதாவது இந்தத் திருத்தச்சட்டத்தில் குறைகள் உள்ளதாக கூறுவது மகிழ்ச்சிகரமான விடயம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
’18 ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவொரு சிக்கலும் இருக்கவில்லை.

நமது ஆட்சிக் காலத்தில் நாம் இதன் மூலம் நாட்டை சிறப்பாகத்தான் வழிநடத்தியிருந்தோம்.

18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் அன்று ஆதரவு வழங்கி இருந்தார்.

அதேபோல், 19 ஆவது திருத்தச்சட்டமும் நாட்டுக்கு உகந்தது என்று அவர்தான் முதன் முதலில் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது நான்கரை வருடங்கள் கடந்து விட்டன.

இப்போதாவது, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குழப்பமிருக்கிறது என அவர் தெரிந்து கொண்டமையானது உண்மையில் பெரிய விடயமாகவே நாம் கருதுகிறோம், எனினும் தற்போது, ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் மாற்றத்தான் இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இதற்கான மறைமுகமான வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!