நாளை சாட்சியமளிக்க ரிஷாத் மற்றும் மகேஷ்க்கு அழைப்பு

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு, இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் கோரவே இருவருக்கும் தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது.

இதன் போது, முதல் சாட்சியமாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயகவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
அடுத்து பிற்பகல் 3.00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
தொடர்ந்து, ஒரு அரச அதிகாரியும் வரவழைக்கப்படவுள்ளதாக, தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. (சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!