தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் 1976ம் ஆண்டின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தடவையாக அது காணப்படும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.(சே)