கனடாவுக்கு குடிபெயர்ந்த நபருக்கு லாட்டரியில் $7 மில்லியன் பரிசு!!

பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நபருக்கு லாட்டரியில் கனடா பணமதிப்பில் $7 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

விடோ ஹலசன் (58) என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட ஹலசனுக்கு சமீபத்தில் லாட்டரியில் கனடா பணமதிப்பில் $7 மில்லியன் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

இதையடுத்து அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

ஹலசன் கூறுகையில், லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்தாலும் நான் செய்யும் வேலையை ராஜினாமா செய்ய மாட்டேன்.

முதலில் எனக்கு பரிசு விழுந்த விடயத்தை என் மகளிடம் கூறியும் அதை அவள் நம்பவில்லை. பின்னர் தான் நம்பினாள்.

பரிசு பணத்தை வைத்து நான் கனவு கண்டது மாதிரி என் மூன்று பிள்ளைகள் மற்றும் நான்கு பேர பிள்ளைகளுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்து தருவேன்.

அவர்களுக்கு முதலில் வீடு வாங்கவுள்ளேன் என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Webadmin

error: Content is protected !!