பண மோசடி செய்ததை தவிர நாட்டில் வேறு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
உனவட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என்றும், ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக எவ்வித பிரச்சினையும் தேவையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் அன்பு செலுத்துகின்ற உணர்வுபூர்வமான ஒருவரே வேட்பாளராக முன்னிறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
18 மற்றும் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உடந்தையாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.(சே)