தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்கள் நிதி உதவி செய்துள்ளனர்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் முகமாக
யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களால் ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்கதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் முகமாக யாழ்.முஸ்லிம் வர்த்தகர்களால், மதங்களுக்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியை யாழ் ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் கையளித்துள்ளனர்.
இதன்போது யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் மற்றும் வர்த்தகர்களும் உடன் இருந்தனர். (நி)