மலேசியாவில் 300 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகர் மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் காற்று மாசடைதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முன்பள்ளிகள் பசீர் குடாங் என்ற தொழிற்பேட்டையில் இயங்குவதால் அப்பகுதியில் அதிகமான காற்று மாசடைதல் ஏற்பட்டிருப்பதால் குறித்த பகுதியினை அதிகாரிகள் சோதனையிட்டதன் பின்னர் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டும் என ஜோஹோர் மாநில முதலமைச்சர் டாக்டர் சஹ்ருட்டின் ஜமால் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் சுமார் 4000 மக்கள் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் காற்று மாசடைதல் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (Ma)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!