மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான விசா ரத்து!

சௌதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பக தீர்மானம்.

மத்திய கிழக்கு முழுவதும் கொவிட்-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

உம்ராவுக்காக சௌதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சௌதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு வீசாக்கள் வழங்கபடமாட்டா என்று சௌதி அரேபியா மேலும் குறிப்பிட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!