நாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நடைபெறவுள்ளது.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.

விசேட தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை ஜுலை மாதத்துக்குள் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என அதன் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!