கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 41 ஆவது அமர்வு, ஜெனீவாவில் ஆரம்பமான வேளை, இலங்கை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டார்.
முக்கியமாக, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சில மதத் தலைவர்களின் வன்முறையை தூண்டும் விதமான சமீபத்திய அறிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன், அரசியல் தலைவர்கள், மத மற்றும் சமூக தலைவர்கள் அனைவரும் இணைந்து, வன்முறைகள் மற்றும் இன ரீதியாக இருக்கும் பாகுபாடுகளை களைவதற்கான வழிமுறைகளை காணப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் செயற்படுகளை பாராட்டுக்குரியது. ஆனால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இருக்கும்.
என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் குறிப்பிட்டுள்ளார். (சி)