மக்களுக்காக அமைச்சர் ஆனார் கபிர் ஹாசிம் : ஹக்கீம்

கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, அரசாங்கத்தில் இருந்து அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த கபிர் ஹாசிம், மக்களுக்கான அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு, அமைச்சுப் பதவியை பெற்றுப்பேற்றுக் கொண்டார் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நாவலப்பிட்டி சமனலகம பகுதியில், ஒன்னரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், குடிநீர்த்திட்டத்தினை ஆரம்வித்து வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமனலகம பகுதிக்கு வரும் வீதியானது, சுமார் 7 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டது.
இந்த வீதி மிக மோசமான முறையில் பழுதடைந்து காணப்படுகின்றது.

ஆகவே இந்த வீதியை புனரமைப்பதற்கு அமைச்சர் கபர் ஹாசிமின் கவனத்திற்கு கொண்டு சென்று, இருக்கின்ற குறுகிய காலப்பகுதிக்குள் இந்த வீதியை புனரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பகுதியில் காணப்படுகின்ற குறைபாடுகளை என்னால் இனங்காண கூடியாதாக இருந்தது.

ஏனென்றால் எனது வாகனம் இந்த வீதியில் போக்குவரத்தினை மேற்கொள்வது கடினமான விடயம்.

அதனால்தான் நான் வந்த வாகனத்தை விட்டு இறங்கி, வேறு ஒரு வாகனத்தில் இங்கு வந்தேன்.
எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற வாகனம் புதிய வாகனம்.

நாம் அரசாங்கத்தை விட்டு விலகி இருக்கின்ற போது, வாகனத்தை மிக கவனமாக பாவிக்க வேண்டும்.

இந்த வீதியை, எனக்கு கிடைத்த நிதியில் இருந்து, சுமார் இரண்டரை கிலோ மீற்றர் வரை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளேன்.

இருந்தாலும் இந்த வீதியை முழுமையாக புனரமைக்க என்னால் முடியாது.

ஆனால் முடிந்ததை நான் செய்து இருக்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!