முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு, இன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மரத்தடி நிழலில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது சிறு வயது பாடசாலை காலத்தில், மரத்தடியில் கல்வி கற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஆளுநர், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியும் என குறிப்பிட்டார்.

அத்துடன், கல்வியை இடைவிடாது கற்று, சமூகத்தில் சிறந்தவர்களாக மாறி, மக்களுக்கு உதவி புரிய வேண்டும் எனவும், ஆளுநர் மாணவர்களை கேட்டுக்கொண்டார். (சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!