ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில், ஜூன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வவுனியா மாவட்ட செயலகத்தில், நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம், இன்று காலை உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகத்தர்களுக்கு ஒரே நேரத்தில் எதிர்ப்புப்பட்டி அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் போது, மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள். உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தினால், ஜூன் மாதம் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட போதையற்ற தேசம் வேலைத்திட்டத்தில், இவ்வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 14 விழிப்புணர்வு பிரசாரங்களும், நாளை அனைத்து திணைக்களங்களைச் சேர்ந்த, 50 வாகனப் பேரணி, வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நகரை நோக்கி செல்லவுள்ளது.
நானை மறுதினம் புதன்கிழமை, மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் போதை ஒழிப்பு எதிர்ப்பு வாசகங்களை தாங்கிய 100 பலூன்கள் வானில் பறக்கவிடப்படவுள்ளதுடன், காலை 8.30 மணிக்கு அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)