மட்டு குருமன்வெளியில் சிறுவர் விளையாட்டு விழா!!

மட்டக்களப்பு குருமண்வெளி கனிஸ்ட வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா இன்று வித்தியால அதிபர் விமலராஜினி புஸ்பராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக்கல்விப்பணிப்பாளரும், மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளருமான பு.திவிதரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக ஆரம்பக்கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் பா.வரதராஜன், குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் செ.புஸ்பராஜா, செயற்பட்டு மகிழ்வோம் வளவாளர் அ.ஜெயப்பிரதாபன் உட்பட ஆலயங்கள், சங்கங்கள், பழைய மாணவர்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!