அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவற்றை நீக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஜனாதிபதி அவரது விருப்பத்திற்கேற்ப நீக்க முடியாது. அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.ஜே.வி.பி மாத்திரமல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நாம் நினைக்கவில்லை.
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மஹிந்த தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதியின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்களால் மாத்திரம் இதனை இல்லாமலாக்க முடியாது.