மேற்கிந்திய தீவுகள் எதிரான போட்டிக்கு இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு காரணங்கள் கருதி இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெறாமல் இருந்த சிரேஷ்ட வீரர்கள் அனைவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அந்தவகையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியானது அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.

இவர்கள் தவிர இலங்கை ஒருநாள் அணிக்கு நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் திரும்பியிருக்கின்றனர். இதில், அதிரடி சகலதுறை வீரரான திசர பெரேரா இலங்கை அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் போட்டியொன்றில் கடைசியாக விளையாடியதோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல இலங்கை அணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் பங்கேற்ற ஒருநாள் போட்டியிலேயே கடைசியாக விளையாடியிருந்தார்.

இதேநேரம், நிரோஷன் டிக்வெல்ல டெங்கு நோய் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!