பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி ஜூலியோ கோர்ஜசை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் தொடர் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் நிலை வீரங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி மற்றும் ஜெர்மனிய வீராங்கனை ஜூலியா கோர்ஜை எதிர்கொண்டார்.

இதில் ஆஷ்லி பார்டி 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜூலியோ கோர்ஜசை வீழ்த்தி சம்பியனானார்.

பிரெஞ்ச் பகிரங்க சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். (சே)