வாக்குறுதிகளை சொல்வது ‘மாமா” வேலை அல்ல – சுமந்திரன்

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீ.வி.விக்கினேஸ்வரன், நிகழ்வில் உரையாற்றும்போது கல்முனை விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ‘மாமா வேலை செய்வதாக” கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளித்து கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்தின்….
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது ‘மாமா வேலையல்ல”, விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செவிசாய்க்காது.

விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுய இலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழத்தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டுவருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகளே பிரதான காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!