வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சாபி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் சாபிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்தவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்களும், டீ.ஐ.ஜிக்கள் மற்றும் ரத்ன தேரர் ஆகியோர்களே ஆவார்கள் எனத் தெரிவித்துள்ள ராஜித சேனாரத்ன, நான் அவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளேனா என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.(மு)