பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காக சற்று முன்னர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம் என கூறி பூஜித் ஜயசுந்தர கடந்த மாதம் 29 ஆம் திகதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.