மட்டு. காத்தான்குடி மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு காத்தான்குடி மஹ்ஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் எம்.சி.எம்.றிஸ்வான் மதனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகர சபை செயலாளர் றிப்கா பீன் உட்பட முக்கியஸ்தர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் பரகஹதெனிய தாருத்தௌஹீத் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.இஸ்மாயில் ஸலபி விஷேட உரையை நிகழ்த்தினார்.

இதன்போது மாணவிகளின் திறமைகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் புதிய மாணவிகளும் வரவேற்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!