சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் யாழில் விழிப்புணர்வு!

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக்கோரி, யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், பெண்கள் இணைந்து கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

இப் பேரணியானது யாழ்ப்பாணம் பண்ணை முற்றவெளிப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கினை சென்றடைந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மைக் காலமாக சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கக் கோரியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் குறித்த கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணியை யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு, பிரதேச செயலகங்கள், யுவசக்தி எனும் அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!