தமிழ்க் கட்சிகள் ஒட்டகத்தை குடிசைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன – எஸ்.தேவராஜா

தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி, குடிசைகளுள் ஒட்டகத்தை நுழைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.தேவராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட, மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இடையிலான உறவே தடையாக இருந்தது என்றும் சட்டத்தரணி தேவராஜா குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 ஆசனங்களை மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி கைப்பற்றக் கூடிய சாத்தியம் உண்டு என்றும், அது புதிய வரலாறாக அமையும் என்றும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.தேவராஜா சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!