நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு!

இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் சேவை புரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், நெல் சந்தைப்படுத்தும் சபைக் கிளை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.

அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர் இந்த வருடம் ஜனவரி மாத இறுதி வாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்கும் முகமாக, விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்வதற்கான விரைவான ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

அதற்கமைய பாதுகாப்புத் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா, பிரிகேடியர் ஐ.பி.கந்தன ஆராச்சியை, நெல் பயிர்ச்செய்கை இடம்பெறும் பிரதேசங்களான யாழ்ப்பணம், வன்னி, கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு ஆகிய பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட அதிகார சபையின் ஒத்துழைப்போடு தங்களது செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு நியமித்தார்.

இராணுவத் தலைமையக தகவலின் பிரகாரம், புதன் கிழமை மாலை வரை இரண்டு மில்லியன் ரூபாவிற்கு அதிகமான நான்கு மில்லியன் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நெற்கொள்வனவில் ‘கீரிசம்பா, சிவப்பு நெல், பெரிய சிவப்பு நெல் ஆகிய நெல்வகை, நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் மாவட்ட செயலகங்களினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!