மட்டக்களப்பில் சுயதொழில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களின் சுயதொழில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், பொருட்களின் விற்பனைக் கூடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் பெண்களைக் கொண்ட காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனம், பெண்களின் சுயதொழில் உற்பத்திகளை காட்சிபடுத்துவதற்கும் அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உதவும் முகமாக ‘கிராமியப் பெண்களின் பொருளாதாரத்திற்கு கைகொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் ஏற்பாடு செய்து நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியும் விற்பனையும் மூன்று நாட்கள் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் ‘கிராமியப் பெண்களின் பொருளாதாரத்திற்கு கைகொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறுகின்ற கண்காட்சி மற்றும் விற்பனையின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராசா கலந்து கொண்டு கண்காட்சி, விற்பனையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!