மட்டக்களப்பு ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா

மட்டக்களப்பு ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியின் ஆலிம்கள், ஹாபிழ்கள் கௌரவிப்பு மற்றும் 8 ஆவது தலைப்பாகை சூடுதல் ஆகிய முப்பெரும் விழா நேற்றிரவு நடைபெற்றது.

அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி பி.எம்.ஏ.ஆயு ஜலீல் பாகவி தலைமையில், மௌலவி அப்துல் றஹீம் நூரி முன்னிலையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அஸ்ஸெய்யித் மௌலானா மௌலவி எஸ்எம்.மஸ்ஹுர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இராணுவ லெப்டினன் கேணல் தாவூத் அனஸ் அஹமட், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே.ஜயன்த மற்றும் நலன் விரும்பிகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எம்.அன்வர் பாஸில் ஸக்காபி சிறப்புரையாற்றினார்.

சுங்காவில் முகம்மது றினாஸ், அக்கரைப்பற்று முகம்மது அஸ்கர் மற்றும் பஹீமுல் ஹஸன் ஆகியோர் ஆலிம்களாக கௌரவிக்கப்பட்டனர்.

சுங்காவில் முகம்மது நஸ்கர், ஏறாவூர் முகம்மது நஜாத் மற்றும் முகம்மது ஜஸார் ஆகியோருக்கு இம்முறை தலைப்பாகை சூடப்பட்டது.

கண்டி முகம்மது ஸாதிக் மற்றும் மூதூர் முகம்மது அஸாம் ஆகிய ஹாபிழ்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

விழா அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த அரபுக் கல்லூரி கடந்த பதினெட்டு வருட காலமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!