நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டம் – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு, வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு வழங்கும் ஆதரவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் பிள்ளைகள் தொடர்பில் ஆராய்ந்து முக்கிய கவனம் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கைக்கு அதிக அந்நிய செலவாணியை தேடித்தரும் தரப்பாக வெளிநாட்டில் பணிபுரிபவர்களை கருதவேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!