சம்பளக் கொள்கைகள் தயாரிப்பு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஆணைக்குழு!

சம்பளக் கொள்கைகள் தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய சம்பள ஆணைக்குழுவில் 15 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உபாலி விஜேவீரவின் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளது.

அரசியலமைப்பின் 33 வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டிருந்த அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!