திருமலை – கிண்ணியாவில் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபை எல்லைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டு அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிண்ணியா பிரதேசசபை எல்லைக்கான செயற்பாட்டு அலுவலகம் குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்கான சகல முன்னெடுப்புகளும் இந்த அலுவலத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘நகரத்தை அழகுபடுத்துவோம்’ திட்டத்தின் கீழ், சித்திரம் வரைந்து அழகுபடுத்திய சித்திர சுவர்களும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!