குருநாகல் மாவட்டத்தில் மேலும் மூன்று தேசிய பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை -வடமேல் மாகாண ஆளுநர்

குருநாகல் மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் தேசிய பாடசாலைகள் உள்ளன.

மேலும் மூன்று பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரகஹதெனிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் உரையாற்றும்போது வடமேல் மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

குருநாகல் பாடசாலைகளில் காணப்படும் குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் ஆளுநரின் பாரியார் பெரோஸா முஸம்மில், மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் முஆத், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்பதிகாரி ரசான், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!