உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்!!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், உதயங்க வீரதுங்கவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன், அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்த நிiலியல், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஓமான் மஸ்கெட் விமான நிலையத்தில் இருந்து, இலங்கை திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டது.

அதன் பின்னர், இன்று மாலை 6.30 மணியளவில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!