சஜித் கூட்டணி கட்சி சின்னம் தொடர்பில் பொது இணக்கப்பாடு!!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் சின்னம் தொடர்பில், தீர்மானம் எடுப்பதற்கான கலந்துரையாடல், கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணிக்கும் இடையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க அணி சார்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அகிலவிராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அணி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும் பண்டார, மங்கள சமரவீர, கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன் போது, சின்னம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக, சட்டக்குழுவின் ஆலோசனையை கோரியிருப்பதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!