சமல் ராஜபக்ஷ, இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!!

மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.

சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அங்கு குழுமியிருந்தவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அத்துடன், தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, தலதா மாளிக்கை சென்ற மக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தெரிவித்தார்.

எமது நாட்டு மக்களை பாதுகாத்து, பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.

எமது நாட்டின் பொலிஸ் மற்றும் இராணுவ துறையை, நாம் எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!