தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதிக்கு பூரண ஆதரவு வழங்குவோம் : நிமல்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என, நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர், பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா என, ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டியதற்கான ஆயத்தப் பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது.

அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

மக்களை வெல்வதற்கு உரிய வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

அதனை பொருத்தமான நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்போம்.

அடுத்தவர் பிரச்சினையை பயன்படுத்தி அதிகாரத்தினை கைப்பற்றும் அரசாங்கம் நாமல்ல.

எங்கள் பலத்தின் ஊடாக நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

ஐக்கிய தேசிய கட்சி ஒன்றாக இருந்தாலும், வௌ;வேறாக இருந்தாலும் எமது வெற்றி நிச்சயமானது.

எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

பலம் இருக்கின்றது.

அதிகளவான ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டு கோட்டர்பய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு வேண்டிய பலத்தினை வழங்குவோம்.

அது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

சின்னம் அவசியமல்ல அவசியமானது ஒற்றுமை.

யதார்த்தத்தினை புரிந்து, தீர்மானத்தினை எடுக்கும் கட்சி எமது கட்சி என்பதால், அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இருக்காது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!