தியத்தலாவையில் தங்கிய மாணவர்கள் வீடு திரும்பினர்!

சீனாவின் வுகான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும், இன்று அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவந்த வுகான் மாநிலத்தில் இருந்து, இவர்கள் கடந்த முதலாம் திகதி அழைத்துவரப்பட்டிருந்தனர்.
விசேட வைத்திய பரிசோதனைக்காக, கடந்த 14 நாட்களாக, தியத்தலாவ இராணுவமுகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள், இன்று தமது இல்லங்களை சென்றடைந்துள்ளனர்.

அவர்களிடம் நடாத்தப்பட்ட சோதனைகளில், கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த மாணவர்கள் தத்தமது வீடுகளை சென்றடைந்துள்ளனர்.

இன்று முற்பகல், விசேட பேருந்தில், அக்ரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜேன்ரல் சர்வேந்திர சில்வா சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து விடை பெற்று வீடு சென்றுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!