மசகு எண்ணெய் விலை குறைவடைந்தால், பயன் மக்களுக்கு : அமரவீர!!

ஜனாதிபதியின், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை இல்லாமல் செய்வதற்கு, எந்தவித முயற்சியும் எடுக்க மாட்டோம் என, பயணிகள் போக்குவரத்து, மின் சக்தி, சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கம்பகாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கினார்.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சிறிதளவில் குறைவடைந்திருக்கின்றது.

சீனா நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இது நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக பாரிய நஸ்டத்துடன் எரிபொருட்களை வினியோகித்து வந்தோம்.

12 ரூபா அதிக விலையில் விற்பனை செய்ய வேண்டி இருந்த போதும், நாம் அவ்வாறு செய்யாது இருந்தோம்.

தற்போது ஒன்று அல்லது இரண்டு ரூபாவினால் எரிபொருட்களை குறைக்க முடியும்.

எனினும் அதனை உடனடியாக குறைத்து, மீண்டும் ஒரு சில நாட்களில் கூட்டுவதனை விடுத்து கொஞ்சம் தாமதித்து செய்யலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை, சற்று இருந்து பார்க்க வேண்டி இருக்கின்றது.

இன்று குறைத்து வரும் வாரங்களில் கூட்டும் எண்ணம் எமக்கு கிடையாது.

இந்த நிலை தொடர்ச்சியாக இருக்குமானால், அதன் பலனை மக்களுக்கு நிச்சயமாக நாம் பெற்றுக் கொடுப்போம்.

எமக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.

விருப்பு வாக்கில் ஏற்படும் தாக்கம் காரணமாக, கீழ் மட்ட உறுப்பினர்கள் குழம்பம் அடைகின்றார்கள்.

அது இப்போது நிகழும் ஒரு விடயம்.

ஒரு கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் வருவதை எதிகாலத்தில் நீங்கள் பார்க்க முடியும்.

எனினும் அதற்கு மேலாக உயர் மட்ட தலைவர்கள் இரு பக்கத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ச மீதும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீதும், நாம் அதிகமான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு, தொடர்ந்தும் பயணிப்போம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை இல்லாமல் செய்வதற்கு, எந்தவித முயற்சியும் நாம் ஒருபோதும் எடுக்க மாட்டோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!