வவுனியாவில் விபத்து : இந்த வாரம் திருமணமான பெண் பலி!!

வவுனியா முருகனூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது கணவரும், முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டில் இருந்து, சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, அருகில் இருந்த மதிலுடன் மோதியே விபத்திற்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி, நோயாளர் காவு வண்டி மூலம், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வவுனியா முருகனூரை சேர்ந்த, 25 வயதுடைய தர்சினி என்ற பெண் உயிரிழந்த நிலையில், கணவரான கலைச்செல்வன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்கள் இருவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்னரே திருமணம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!