மட்டு கல்குடாவில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்ட கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுக்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத ஐம்பத்தைந்தும் அறுபதுக்கும் இடைப்பட்ட வயதினையுடைய வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதனை அப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர். சடலத்தினை பார்வையிட்ட மீனவர்கள் கிராம அதிகாரிக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் கல்குடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுக்கி இருக்கலாம் என்றும், குறித்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் தெவித்தார்.

இனந்தெரியாத வயோதிப பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!