திருக்கோவிலில் புனரமைக்கப்படும் 18 விவசாய குளங்கள்!!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 விவசாய குளங்களை விவசாய அமைச்சு உலக வங்கியின் நிதி உதவியுடன் புனரமைத்து பிரதேசத்தின் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தவது தொடர்பான மீளாய்வு கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இவ் அபிவிருத்தி கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேச மக்களது பிரதான ஜீவனோபாய தொழிலாக விவசாயம் காணப்படுவதுடன் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அனேகமான விவசாய குளங்கள் மூன்று தசாப்பங்களுக்கு மேலாக பாரியளவில் புனரமைப்பு பணிகள் முன்னொடுக்க முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டன.

இந்நிலையில் கால நிலை மாற்றத்திற்கு அமைவாக விவசாய உற்கத்திகளை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் இலங்கை அரசு விவசாய அமைச்சியின் ஊடாக உலக வங்கியின் நிதியுதவியுடன் கஞ்சிகுடியாறு குளம் உட்பட சுமார் 18 விவசாய குளங்களை புனரமைக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகள் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு இடையிலான திட்ட மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் மற்றும் விவசாய திணைக்கள அதியாரிகள் திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கமநல சேவை திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!