கிளி கரைச்சி பிரதேச சபையினால் தாய்ப்பாலூட்ம் அறை!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால், பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட, கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகியவற்றுக்கு, பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி, கரைச்சி பிரதேச சபையினால், பொதுச் சந்தை வளாகத்தில், தாய்ப்பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திறந்து வைத்தார்.

நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!